Tuesday, July 15, 2008

நானும் என் மௌனமும்

நதிக்கரையில் அகன்ற மரத்தடியின்
தனித்த இருக்கையில்
நானும் என் மௌனமும்
கிளையை பிரிந்த இலையின்
காதில் கிசுகிசுத்து செல்லும் தென்றல்
என் ஈரமான நினைவுகளை
என்னை ஆற்றுப்படுத்துவதாய்
மெல்லத்தழுவி பின் தள்ளிவிழும்
என் நினைவுசுமந்த இலை
சில குளிர்ந்த தருணங்களையும்
கடைசியாய் ஓர் கனத்த நினைவையும்
காற்றும் இலையும் பேசியிருக்கையில்
தூங்கிபோயிருக்கும் என் மௌனம்
ஒற்றைத்துளி கண்ணீரோடு
மீண்டும் சந்திப்போமென
எனக்குள் சொல்லி மௌனம்
பிரிந்து மெல்ல நடப்பேன்
ஒற்றை இலையோடு

ஜனா கே

9 comments:

Mahendirakumar said...

hi buddy
dont u think this is too much.....
but its simply super.....

ஜனா கே said...

Hey Thanks Man!!!

moonwalkerguna said...

machi, normal a elathukiulam oru singam thonkittu erukum ana unaku ulla oru dinosaur thongikittu erukda...

Superb

-Guna.K

ஜனா கே said...

adei... ithukkuthaan oorukulla oru all in all alagu raja venumkiradhu intha mathiri comment ezhutharaathukku

thanks machi!!!

Anonymous said...

வலையுலகிற்கு வருக வருக! பிரமாதமான கவிதை, நம்பிக்கை தரக்கூடிய ஒரு சத்தியம் போல கட்டியம் கூறுகிறது! வாழ்த்துகள். :D

Anonymous said...

Excellent Jana! WAY 2 go :-)

sudalai said...

Hi da motta
Adhula paaruda.........
Oru kavidhai
oru kavidhai
kavidhai ezhudhudhu!!!!!
Machan k va..
Simply Superb da.

ஜனா கே said...

நன்றி அரவிந்தன்!!! மீண்டும் சந்திப்போம் அடுத்த பதிவில், அப்போது சொல்லுங்கள் என் எழுத்துக்கள் "கட்டிய" திற்கு உகந்ததா என்று :)

@Sudli,

k da machi!!! neenga sonna sarthaan!!!

@Pavi,

dank u :)

Vignesh said...

Jana,

I have seen this blog even before but jus now i found that Jana is u...

நானும் என் மௌனமும்..I would have read this a dozen times, such a deep and therapeutic feeling it gives...

Hats off!!